// print_r($new['title']); ?>
day, 00 month 0000

விக்கி தலைமையில் புதிய கூட்டணி – நாளை ஒப்பந்தமும் கைச்சாத்து

தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் எந்தவிதமான இணக்கப்பாடுகளும் இன்றி நிறைவடைந்துள்ளது.

யாழில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் இந்த கலந்துரையாடல் இன்று மாலை 4.30 மணியளில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது.

எனினும் இதன்போது எந்த இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாளையதினம் நடைபெறவுள்ள கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக ஆராயப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கூட்டணிக்கான ஒப்பந்தமும் நாளையதினம் கைச்சாத்திடப்படுமெனறும் இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், யாழ் மாநகரசiயின் முன்னள் முதல்வர் 

வி.மணிவண்ணன், க.சர்வேஸ்வரன், குருசாமி சுரேந்திரன், விந்தன் கனகரட்ணம், சபா.குகதாஸ் 

உள்ளிட்டோர் கலந்துகொண்டதுடன் உள்ளூராட்சிமன்றங்களின் பிரதிநிதிகள் அடங்கிய 25 பேர் வரையானோர் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்