cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

கூட்டமைப்பு பிரிந்து போட்டியிடுவதற்கான காரணத்தை வெளியிட்டார் சாள்ஸ்

மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று அங்கத்துவக் கட்சிகளும் இணைந்து மாவட்டத்தில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களையும் கைப்பற்றும் என வன்னி மாவட்ட  நாடாளுமன்ற  உறுப்பினர்  சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தை இலங்கை தமிழரசு கட்சி சார்பாக இன்றைய தினம் (புதன்கிழமை) மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் தேசியக்கூட்டமைப்பு இம்முறை தனித்து உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதன் பிரதான நோக்கமானது 2018 ஆம் ஆண்டு தேர்தல் முறைமை காரணமாக உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மாத்திரம் தனித்து போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையில் எந்த பிரச்சினையும் இல்லை.உதாரணமாக மன்னார் நகர சபையில் நாங்கள் ஒரு வட்ட தாரத்தை தவிர மிகுதி வட்டாரங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றி இருந்தது.

ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களால் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை காணப்பட்டு வேறு கட்சியை சேர்ந்தவர்களை அழைத்தே நாங்கள் ஆட்சி அமைத்தோம்.

அதன் காரணமாகவே தனித்தனியாக தேர்தலில் போட்டியிடுவதாகவும்,வெற்றி பெற்று வருகின்ற உறுப்பினர்கள் ஒன்றாக ஆட்சியமைப்பதாகவும்,கடந்த 3 மாதங்களுக்கு முன்போ எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடிக்கதைத்தோம்.

அதனடிப்படையில் கட்சிகள் முடிவெடுத்துள்ளது.ஒவ்வொரு வட்டாரத்திலும் மூன்று கட்சிகள் சார்பாக போட்டியிட்டால் குறித்த மூன்று கட்சி சார்பாகவும் வாக்களிக்குமாறு தெரிவிப்போம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூன்று கட்சிகளும் இணைந்து மன்னார் மாவட்டத்தில் 4 உள்ளூராட்சி மன்றங்களையும் கைப்பற்றும் ”என அவர் மேலும் தெரிவித்தார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்