cw2
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகளை மீறிய குற்றத்தில் சிறிலங்காவின் இரண்டு முன்னாள் அதிபர்களும் சகோதரர்களுமான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கும் படைத்துறை அதிகாரியான சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி உட்பட்டவர்களுக்கும் கனடா தடைகளை விதித்துள்ளது.
கனடாவின் சிறப்புப் பொருளாதார நடவடிக்கை குறித்த விதிமுறைகளின் அடிப்படையில் இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தடைவிதிக்கப்பட்டவர்களுக்கு கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கனடாவுக்குள் உள்நுழைவதற்குரிய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தடைவிதிப்பட்டவர்களுடன் கனேடிய குடியுரிமையுள்ளவர்கள் கனடாவுக்கு உள்ளே அல்லது வெளியே எந்தவொரு நிதி பொருளதாதார மற்றும் சொத்துகள் தொடர்பான தொடர்புகளை பேணுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.