day, 00 month 0000

பழமை வாய்ந்த நாசா செயற்கைகோள் செயலிழப்பு; உதிரிபாகங்கள் மனிதர்கள் மீது விழுமா?

38 ஆண்டுகள் பழமைவாய்ந்த நாசா செயற்கைக்கோள் தற்போது செயலிழந்துள்ளது. குறித்த செயற்கைகோள்  விண்ணில் இருந்து பூமிக்கு விழ உள்ளது. 

இந்நிலையில், செயற்கைகோளின் உதிரிபாகங்கள் மனிதர்கள் வசிக்கும் பகுதியில் விழுந்துவிடுமோ என்ற அச்சம் நிலவியது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று நாசா நேற்று தெரிவித்துள்ளது. 

குறித்த செயற்கைக்கோள், நாளைய தினம் பூமியில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு சுமார் 17 மணிநேரம் எடுக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை குறித்த செயற்கைக்கோள் வரும் திங்கள் அன்று பூமியில் விழும் என கலிபோர்னியாவை சேர்ந்த ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் கண்காணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு, வடக்கு மற்றும் தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதிகள் வழியாக செல்லும் பாதையில் 13 மணிநேரம் எடுக்கும் எனவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

செயற்கைக்கோளில் பெரும்பாலானவை பூமிக்கு வரும் வேளை எரிந்துவிடும் என்று நாசா தெரிவித்துள்ளது. ஆனால் சில துண்டுகள் எரியாமல் பூமியில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்