cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

வடக்கு, கிழக்கில் 25 வீத இராணுவக் குறைப்பு கோரிக்கை - அமெரிக்க அமைப்புக்கள் அங்கீகாரம்!

இலங்கையின் தமிழ்த் தலைவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படும் நேரத்தில், 1983க்கு முந்திய காலப்பகுதியில் தமிழ்ப் பகுதிகளில் இருந்ததைப் போன்று இராணுவப் பிரசன்னத்தை குறைக்க வேண்டும் என்ற இலங்கையை தளமாகக் கொண்ட தமிழ் சிவில் சமூகக் குழுக்களின் கூட்டு அழைப்பை அமெரிக்காவை தளமாகக் கொண்ட பல புலம்பெயர் தமிழ் குழுக்கள்  அங்கீகரித்துள்ளன.

அத்துடன் சம்பிரதாயமான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் தமிழர் பகுதிகளில் இருந்து 25 வீத இராணுவ பிரசன்னத்தை இலங்கை குறைக்க வேண்டும் என்று இலங்கையின் சிவில் குழுக்கள் கோரியுள்ளன.

இது பேச்சுவார்த்தைக்கு நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.

பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் யுத்தம் முடிவடைந்த பின்னரும் தமிழர் பிரதேசங்களில் பாரிய இராணுவ பிரசன்னம் தொடர்கிறது.

1983 ஆம் ஆண்டு முதல் தமிழர் பகுதிகளில் அதிகப்படியான இராணுவக் கட்டியெழுப்பும் ஆரம்பிக்கப்பட்டது.

தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய அட்டூழியங்களைச் செய்த அதே துருப்புக்களே பாதிக்கப்பட்டவர்களிடையே நிறுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக ஆய்வு அறிக்கையின்படி, மே 2009 இல் முடிவடைந்த போரின் இறுதி ஆறு மாதங்களில் சுமார் எழுபதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

ஏராளமான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பல தீர்மானங்கள் பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுத்த போதிலும், ஒரு அரசியல் அல்லது இராணுவ உறுப்பினர் கூட நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என மதத் தலைவர்கள் பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்புகள் பாதிக்கப்பட்ட குழுவினர் மற்றும் பலர் அடங்கிய இலங்கைத் தமிழ் சிவில் சமூகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வும், சர்வதேச ரீதியில் நடத்தப்படும் மற்றும் கண்காணிக்கப்படும் வாக்கெடுப்பு மூலம், சர்வதேச ரீதியில் தமிழ் மக்களின் ஆணையைப் பெற வேண்டும் என்றும் இலங்கையின் தமிழ் சிவில் குழு வலியுறுத்தியுள்ளது.

இந்தநிலையில் இலங்கையின் தமிழ் சிவில் குழுவின் இந்த கோரிக்கைகைகளை வட அமெரிக்காவின் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழ்ச் சங்கம், தமிழ் அமெரிக்கர்கள் ஐக்கிய அமைப்பு, ஐக்கிய அமெரிக்காவின் தமிழ் செயல் குழு, உலகத் தமிழ் அமைப்பு என்பன அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்