// print_r($new['title']); ?>
day, 00 month 0000

கனடாவில் வீடு வைத்திருப்போருக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

கனடாவில் உள்ள வீடுகளின் உரிமையாளர்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

அந்தவகையில் றொரன்டோவில் வீட்டு உரிமையாளர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருந்த போது, அவர்களது வீடு வேறு நபர்களினால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்த வீட்டு உரிமையாளர்களை பெரும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

இட்டோபிகொக் பகுதியில் இவ்வாறு வீடு மோசடியான முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வீட்டின் உண்மையான உரிமையாளர்கள் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாடு சென்றுள்ளதையடுத்து உண்மையான வீட்டு உரிமையாளர்கள் போன்று போலி ஆவணங்களை தயாரித்து இந்த வீடு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடி சம்பவத்துடன் தொடர்படைய ஆண் மற்றும் பெண் ஆகியோரின் புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், வீட்டு உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே இவ்வாறு வீடு விற்பனை செய்யப்பட்டமை குறித்து காவல்துறையினர் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்