cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

போதைப் பொருளுக்காகப் பெண்கள் பாலியல் துர்நடத்தை; யாழில் அதிர்ச்சி

உயிர்கொல்லி போதைப்பொருள்களான ஹெரோய்ன் மற்றும் ஐஸ் என்பனவற்றைக் கொள்வனவு செய்வதற்காகப் பாலியல் துர்நடத்தையில் 23 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த காலங்களை விட உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை இளம் சமூகத்தினர் மத்தியில் அதிகரித்துள்ளது. 

சில தரப்புக்கள் இளம் பெண்களை இலக்கு வைத்தும் இதனை விநியோகித்து வந்துள்ளன. அவ்வாறு உயிர்கொல்லிப் போதைப்பொருளுக்கு அடிமையான இளம் பெண்கள், அவற்றைத் தொடர்ந்து கொள்வனவு செய்வதற்காகப் பாலியல் துர்நடத்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) ஏழு பெண்கள் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளனர் என்று தெரியவருகின்றது.

"உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனையை ஒழிக்கவேண்டும் என்பதுடன், இவ்வாறான கலாசாரப் பிறழ்வுகளை ஆரம்பத்திலேயே தடுக்கவேண்டும்" - என்று சமூகஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்