// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ரணில்-கூட்டமைப்பு சந்திப்பு திகதி அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இருப்பினும், சந்திப்புக்கான இடம் மற்றும் நேரம் ஆகியன இறுதி செய்யப்படவில்லை என தெரியவருகின்றது.

அத்துடன், குறித்த பேச்சுவார்த்தையின் போது தேசியப் பேரவைக்கு அழைக்கப்பட்ட அரசியல் தலைவர்களையும் அழைப்பதற்கான அறிவிப்பு விடுக்கப்படவுள்ளது.

இனப் பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக பேச்சுக்களை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.

அத்துடன் வரவு – செலவு கூட்டத் தொடருக்கு அடுத்த வாரத்தில் பேச்சுக்களை நடத்த முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், குறித்த அழைப்பு தொடர்பாக கடந்த மாதம் 25ஆம் திகதி தமிழ்க் கட்சிகள் ஒன்றுகூடி, சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் கலந்துரையாடலை நடத்தியிருந்தன.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்