// print_r($new['title']); ?>
day, 00 month 0000

மீண்டும் பெரும்பான்மையை நிரூபித்த ரணில்; 2023 பட்ஜெட் நிறைவேறியது

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 37 மேலதிக  வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 121 வாக்குகளும் ,எதிராக 84 வாக்குகளும்,ஒருவர் வாக்களிக்காத நிலையில்  37 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்ட குறித்த பட்ஜெட் மீதான  விவாதம் கடந்த ஒரு வாரகாலமாக பாராளுமன்றில் நடைபெற்றது.இன்று மாலை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு  நடைபெற்றது.

அதற்கு அமைவாக 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்