// print_r($new['title']); ?>
சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஊழல் தொடர்பில் பல ஆதாரங்களை வெளியிட தயாராகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நான் சபையில் இல்லாத போது சக நாடாளுமன்ற உறுப்பினர் பல்வேறு பொய்யான குற்றச் சாட்டுக்களை என் மீது சுமத்தியுள்ளார்.நான் காணிகளை அபகரிப்பதாகவும்,ஆள் கடத்தலில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் அவருக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன் .நீங்கள் கூறிய அனைத்தையும் ஆதாரத்துடன் நிரூபியுங்கள். நீங்கள் செய்யும் காணி அபகரிப்பு, அவுஸ்ரேலிய ஆள் கடத்தல்,கொலைகள் உள்ளிட்டவற்றை விசாரிக்க ஜனாதிபதிக்கு நான் கோரிக்கை முன்வைக்கின்றேன்.
சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஊழல் தொடர்பில் பல ஆதாரங்களை நான் தரவும் தயாராக இருக்கின்றேன் என்றார்.