// print_r($new['title']); ?>
day, 00 month 0000

உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்த மாத்திரமே அனுமதி

தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தாமல் யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்துங்கள் என முல்லைத்தீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட தலைவி ஈஸ்வரி மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உட்பட பலருக்கு காவல்நிலையத்தில் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டு மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகமானி அறிவித்தலில் பிரகாரம் தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளின் கொடி, சின்னம் மற்றும் அடையாளங்களை பயன்படுத்தக்கூடாது.

அவ்வாறு செயற்பட்டால் தாம் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் ஆனால் யுத்தத்தில் உயிரிழந்த பொது மக்களிற்கு அஞ்சலி செலுத்த தடையில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்