// print_r($new['title']); ?>
day, 00 month 0000

சமஷ்டி இல்லாத பேச்சு தேவையில்லை

தமிழ் தேசியக்  கூட்டமைப்புடன் பேசத்தயார், ஆனால் சர்வதேச தலையீடு தேவையில்லை என அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். யுத்தத்தை  நடத்துகிற போது வெளியாரின் தலையீடு தேவைப்பட்டது என்றால்,  எம்மை அழிக்கின்ற போது வெளியாரின் தலையீடு தேவைப்பட்டது என்றால்,  இப்போது பணம் பெறுவதற்கு வெளியாரின் தலையீடு தேவைப்படுகின்றது என்றால், பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வெளியாரின் தலையீடு தேவைப்படுகின்றது என்றால், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கின்றபோது மட்டும் வெளியார் தேவையில்லை எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயமாகும் என  தமிழ் தேசியக்  கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சபையில் தெரிவித்தார். 

ஜனாதிபதி தொடர்ச்சியாக ஏமாற்று செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த காலங்களிலும் அவர் இதுபோன்ற  செயற்பாடுகளையே முன்னெடுத்தார். கடந்த காலங்களில் ஒருபக்க பார்வைகளால் சமாதானத்துக்கான கதவுகள் மூடப்பட்டன. அந்த அனுபவங்களை வைத்தே இப்போதும் நாம் பேசுகின்றோம். ரணில் விக்கிரமசிங்க இதய சுத்தியுடன் இருக்கின்றார் என்றால், இந்த நாட்டில் புரையோடிக்கிடக்கின்ற இனப்பிரச்சினையை தீர்க்க அவர் தயாராக இருக்கின்றார் என்றால், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சமஸ்டி அடிப்படையில் பேசுங்கள். சமஸ்டி என்கிற கோரிக்கையை முன்வையுங்கள். எம்முடன் நீங்கள் ஒரு தீர்வுக்கு வரத் தவறினால் நாளைய வரலாறு உங்களை வேறு திசைக்கு கொண்டு செல்லலாம். அது வேறு விதமான விபரீதங்களை ஏற்படுத்தலாம். ஆகவே சமாதானத்தை ஏற்படுத்த தயாராகுங்கள். இதுவே நாட்டை கட்டியெழுப்ப சாதகமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார் . 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்