// print_r($new['title']); ?>
21 ஆம் நூற்றாண்டின் நவீன உலகிற்கு ஏற்ற புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணி, 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் ஊடாக ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,
(2.02 pm) நாட்டின் நீண்டகால (2023-2048) அபிவிருத்தி, பிரபலமான தீர்மானங்களில் அன்றி, சரியான தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டது.
(2.12 pm)இளைஞர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் போன்ற பாரம்பரிய அரசியல் முறைகளுக்கு அப்பாற்பட்ட புதிய வேலைத்திட்டங்கள், புதிய அணுகுமுறையின் மூலம், இளைஞர்களின் எதிர்காலத்திற்கு உகந்த புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம். (2.22 pm)வௌிநாட்டு முதலீட்டாளர்களை கவர்வதற்காக மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் புதிய பொருளாதார வலயங்களை உருவாக்கவுள்ளோம்.
(2.32 pm)தற்போதைய தேவைகளின் அடிப்படையில் அரச சேவையின் அனைத்து அம்சங்களையும் மீளாய்வு செய்வதற்கும் தேவையான சீர்திருத்தங்கள் மற்றும் பரிந்துரைகளை செய்வதற்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்மொழியப்பட்டுள்ளது.
வரி விதிப்பு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவை நிறுவ முன்மொழியப்பட்டுள்ளது.
(2.41 pm)கடவுச்சீட்டு மற்றும் வீசா கட்டணங்கள் 20 சதவீதத்தினால் அதிகரிப்பு
தனியார் துறை ஊழியர்களுக்கான காப்புறுதி நிதியமொன்றை ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி சலுகைகள் வழங்கப்படும் நிலையில், தனியார் துறையினருக்கும் அத்தகைய காப்புறுதி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஒரு பீடிக்கு இரண்டு ரூபாய் வரி விதிக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டு மற்றும் வீசா கட்டணங்கள் 20 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, டீசல் மற்றும் கச்சா எண்ணெய், பெட்ரோல் மீது இந்த புதிய மேலதிக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி, இறக்குமதியின் போது இந்த மேலதிக கட்டணம் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
தயாரிப்பு தொழிற்றுறையினை ஊக்குவிப்பதற்கும் சர்வதேச வர்த்தகத்தில் காணப்படும் தடைகளை நீக்குவதற்கும் விவசாயம் உட்பட உள்நாட்டுக் கைத்தொழில்கள் மற்றும் கருத்திட்டங்களுக்குத் தேவையான ஊக்கிவிப்பு மற்றும் வசதிகளை வழங்குவதற்கு, மூலப்பொருட்கள் இடைநிலைப் பொருட்கள், சில விவசாய அடிப்படைப் பொருட்கள் தவிர்ந்த மூலதனப் பொருட்களுக்கு ஏற்புடைய செஸ் வரியானது 2023 ஜனவரி 01 இலிருந்து மூன்று (03) வருடங்களில் நீக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய முன் மொழியப்பட்ட வரியினை நீக்குவது கட்டம் கட்டமாக சரி செய்யப்படுவதற்காக 2023 ஜனவரி 01 இலிருந்து தற்போது அறவிடப்படும் சுங்கத் தீர்வை வீதமான 0%, 10% மற்றும் 15% ஆகிய தீர்வை வீதங்களை 0%, 15% மற்றும் 20% ஆக திருத்தம் செய்கின்றேன்.
இதற்கு சமாந்தரமாக வர்த்தக சரிப்படுத்தல் நிகழ்ச்சித்திட்ட (Trade adjustment programs) அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.