cw2
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் பருத்தித்துறை பொலிசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
போதைப் பாவனை அதிகரித்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மோப்ப நாய் சகிதம் பொலிசார் இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பருத்தித்துறை சந்தை, முச்சக்கரவண்டித் தரிப்பிடம், மந்திகைச் சந்தை, மந்திகை வைத்தியசாலை வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் இச் சோதனை நடவடிக்கை பருத்தித்துறை பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பியந்த அமரசிங்க தலைமையில் இடம்பெற்றது.