day, 00 month 0000

35 வருடங்களுக்கு பிறகு ‘நாயகன்’ கூட்டணி... மீண்டும் இணைகிறார்கள் மணிரத்னம் - கமல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் மாபெரும் வெற்றிபெற்றது. விக்ரம் கொடுத்த வெற்றியும், உத்வேகமும் கொடுத்த உற்சாசகத்தில் கமல் ஹாசன் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகினார். அந்தவகையில் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தியன் 2 மீண்டும் ஷூட்டிங் ஆரம்பித்தது. தற்போது இந்தியன் 2விலும், பிக்பாஸிலும் கமல் ஹாசன் பிஸியாக இருக்கிறார். இதனையடுத்து விக்ரம் 2 படம் ஆரம்பிக்கப்படுமா என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்தது. அதேசமயம் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் படத்தை இயக்கும் பணிகளில் இறங்கினார். அதனைத் தொடர்ந்து கைதி 2 பட வேலை இறங்கப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனால் விக்ரம் 2 தாமதமாகிறது.

இப்படிப்பட்ட சூழலில் கமல் ஹாசன் மலையாள இயக்குநரான மகேஷ் நாராயணன் படத்தில் நடிப்பார் என தகவல் வெளியானது. இருப்பினும் லோகேஷ் கனகராஜ் கைவசம் இரண்டு படங்கள் இருப்பதால், மகேஷ் நாராயணனுடனான படத்தை முடித்து கமல் யார் இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்தது.

இதனையடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கவிருப்பதாகவும், அந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. அதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகுமென்று தகவல் வெளியானது.

இந்நிலையில் வெளியான அறிவிப்பில் கமல் ஹாசனின் 234ஆவது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கமல் ஹாசனின் 234ஆவது படத்தை மணிரத்னம் இயக்கவிருக்கிறார். படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. 

படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.2024ஆம் ஆண்டு படம் வெளியாகவிருக்கிறது. ஏறத்தாழ 35 வருடங்களுக்கு பிறகு கமலும், மணிரத்னமும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்