cw2
வவுனியாவில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த 23 வயதான பெண் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வேகமாக சென்ற அதி சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையிலேயே குறித்த விபத்தில் உயிரிழந்த யுவதி நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
குறித்த பெண் யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த 23 வயதான இராமகிருஷ்ணன் சயாகரி என தெரியவருகிறது.
அவரின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
தேவேளை பேருந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.