day, 00 month 0000

விஜய்யின் குரலில் 'ரஞ்சிதமே': 'வாரிசு' பாடல் ரிலீஸ்

தளபதி விஜய் நடித்த 'வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் துவக்கியுள்ளனர்

முதல்கட்டமாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இன்று காலை இந்த பாடலின் புரமோ வீடியோ வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது

இதனை அடுத்து சற்றுமுன் 'வாரிசு’ படத்தின் 'ரஞ்சிதமே’ என்ற பாடல் புரோமோ வெளியாகியுள்ளது. 30 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த பாடலின் புரமோ வரிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ரஞ்சிதமே ரஞ்சிதமே மனசை கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்னை உதடு வலிக்க கொஞ்சணுமே

என்ற இரண்டு வரிகள் மட்டும் இருக்கும் இந்த பாடலை தற்போது விஜய் ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். விஜய்யின் அபாரமான டான்ஸ், பிரமாண்ட செட் ஆகியவை இந்த 30 வினாடி காட்சிகளில் காண முடிகிறது.

இந்த பாடலை ஏற்கனவே எதிர்பார்த்தபடி தளபதி விஜய் அவர்கள் பாடியுள்ளார் என்பதும் தமன் இசையமைப்பில் உருவாகி இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பாடலின் முழுவடிவம் வரும் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த பாடலை கேட்க விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

https://www.youtube.com/watch?v=t0hPzfc1pLU&t=29s


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்