பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையிலான சமூக இயக்கத்தில் இணைந்துகொள்வது குறித்து சிந்தித்து வருவதாக அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதத்திற்குள் நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் முடிவிற்கு வந்தால் அமைச்சு பதவியை இராஜினாமா செய்துவிட்டு சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தில் இணைந்துகொள்ளப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கருஜெயசூரிய விக்டர் ஐவனின் சமூகநீதிக்கான தேசிய இயக்கம் சிறந்த ஒரு விடயத்திற்காக குரல்கொடுக்கின்றது என நான் கருதுகின்றேன் அவர்கள் சமீபத்தில் தங்கள் திட்டங்களை எங்கள் முன் தெளிவுபடுத்தினார்கள் முன்னோக்கி செல்வதற்கு அதுவே சிறந்த வழி என கருதுகின்றேன் என ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நான் எனது அரசியல்வாழ்க்கையிலிருந்து வெளியேறி அதில் இணைய விரும்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசியலின் முழு கருத்தும் பிழையானது அது இனம் மதம் என பிளவுபட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளதுடன் நாங்கள் பிளவுபட்டிருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுயநலம் மிக்கவராக காணப்படுகின்றார் ஜனாதிபதியாக பதவியேற்பது குறித்து உறுதியாகவுள்ளார் என ஹரீன் பெர்ணாண்டோ சாடியுள்ளார்.
இது சுலபமில்லை நாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைக்கு காரணமான நபரின் முகத்தை மாத்திரம் நீங்கள் மாற்றுகின்றீர்கள் என தெரிவித்துள்ள ஹரீன்பெர்ணாண்டோ சஜித் பிரேமதாச இன்னுமொரு குழப்பமாக மாறுவார் அமைப்புமுறையை மாற்றுவதே அவசியம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.