cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

"அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பில் அனைவரும் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும்"

எங்கள் மண்ணைச் சார்ந்த இளைஞர்கள் பல வருடங்களாகசிறைக்கூடங்களில் அடைக்கப்பட்டு எத்தனை தூரம் எத்தனை அமைப்புக்கள் அவர்களை விடுவிக்குமாறு எத்தனையோ நியாயங்களை எடுத்துரைத்தும் அவர்கள் விடுதலை செய்யப்படாமை குறித்து கவலை அடைகின்றோம் என செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர்மேலும் தெரிவிக்கையில்;

சைவ மக்கள் சார்பில் சிறைகளில் அடைக்கபட்ட எம் மக்கள் விரைவாக விடுதலை செய்யப்பட்டு குடும்பங்களுடன் இணைந்து தமது வாழ்வை தொடர வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

எங்கள் சமுதாயத்திலே ஒருமித்த குரலாக கைதிகளின் விடுதலை தொடர்பில் குரல் எழுப்பவேண்டும். அதேவேளை நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல நாங்கள் மக்களுக்காக பிராத்தனை செய்பவர்கள்.

எனவே அழுத கண்ணீரோடு பல வருடங்களாக அவர்களின் உறவினர்கள் பெற்றோர்கள் காத்திருக்கின்றார்கள். எனவே சகல துறைசார் அரசியல் தலைவர்களும் குரல் கொடுத்து எமது இளைஞர்களை விடுவிக்க குரல் கொடுக்க வேண்டும்.

இந்த விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி அவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்