பிரித்தானியாவில் பூனை ஒன்றை பிளெண்டரில் போட்டு அரைத்து கொலை செய்வதை காணொளியாக பதிவு செய்த இளம் பெண் ஒருவர் இன்று மனித படுகொலை தொடர்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
25 வயதான ஸ்கார்லெட் பிளேக், கடந்த வாரம் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இன்று திங்களன்று ஒக்ஸ்போர்டு கிரவுன் நீதிமன்றத்தில் முன்னிலையாகினார்.
இதன்போது குற்றவாளிக்கு 24 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2021 ஜூலை 25 ஆம் திகதி 30 வயதான ஜோர்ஜ் மார்ட்டின் கரேனோவை கொலை செய்த குற்றத்திற்காக குறித்த பெண்ணுக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை இடம்பெற்ற நான்கு மாதங்களுக்கு பின்னர் பூனை ஒன்றின் கொடூரமான கொலையை ஸ்கார்லெட் பிளேக் நேரலையில் ஒளிபரப்பினார்.
தண்டனை அறிவித்த நீதிபதி சேம்பர்லெய்ன், பிளேக்கிற்கு "தீங்கு மற்றும் மரணத்தின் மீது ஆவேசம் இருந்தது" என்றார் கூறினார்.
பூனையைக் கொன்றதற்கான குற்றச்சாட்டை பிளேக் ஒப்புக்கொண்டார், ஆனால் மார்ட்டின் கரேனோவை ஆற்றில் வீசுவதற்கு முன், அவரது தலையில் அடித்து கொலை செய்ததை மறுத்தார்.
சீனாவில் பிறந்து ஒன்பது வயதில் பிரித்தானியாவிற்கு வந்த பிளேக், பூனையைக் கொல்லச் செய்ததற்காக பெல் மீது குற்றம் சாட்டினார்.
எவ்வாறாயினும், மார்ட்டின் கரேனோவை ஆற்றங்கரையில் விட்டுச் சென்றபோது அவர் உயிருடன் இருந்ததாக பிளேக் நீதிமன்றில் கூறினார்.
இதேவேளை, தண்டனை அறிவிக்கப்பட்ட போது மார்ட்டின் கரேனோவின் குடும்பத்தினர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
மார்ட்டின் கரேனோவின் தாய், தனது மகன் "ஒரு சிறந்த உலகத்தை உருவாக்க விரும்பியதாகவும்" "நம்பமுடியாத அளவிற்கு நல்ல மனிதர்" என்றும் கூறினார்.