day, 00 month 0000

வலுவடையும் இந்திய இலங்கை கடற்தொழிலாளர் பிரச்சினை: டக்ளஸிடம் சந்தோஷ் ஜா விடுத்துள்ள வலியுறுத்தல்

இந்தியா, இருதரப்பு பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதனடிப்படையில், இந்திய – இலங்கை கடற்தொழிலாளர்களுக்கு இடையேயான பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வலியுறுத்தியுள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்படி வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கடற்தொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான ஆக்கபூர்வமான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, வட மாகாணத்தில் இந்தியாவினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்றிட்டங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்