உக்ரைன் நெருக்கடிக்கு இராஜதந்திர தீர்வை காணவேண்டும் என பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிரந்தரமான நியாயமான அமைதியை ஏற்படுத்தக்கூடிய இராஜதந்திர தீர்வை காணவேண்டும் என பரிசுத்தபாப்பரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பு ஆரம்பமாகி நேற்றுடன் இரண்டுவருடங்களாகின்ற நிலையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
மிகவும் நீண்டதாக மாறிக்கொண்டிருக்கும் யுத்தத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் - காயமடைந்துள்ளனர்,அழிவும் துயரமும் கண்ணீரும் காணப்படுகின்றது என தெரிவித்துள்ள பரிசுத்தபாப்பரசர் இந்த யுத்தம் அந்த பிராந்தியத்தில் மாத்திரம் பேரழிவை ஏற்படுத்தவில்லை சர்வதேச அளவில் வெறுப்புணர்வையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நியாயமான மற்றும் நீடித்த அமைதியை தேடும் இராஜதந்திர சூழ்நிலையை உருவாக்குவதற்காக சிறிதளவு மனிதநேயத்திற்காக நான் கெஞ்சுகின்றேன் மன்றாடுகின்றேன் என பாப்பரசர் தெரிவித்துள்ளார்.
கொங்கோவில் அதிகரிக்கும் மோதல்;கள் குறித்தும் அவர் கவலைவெளியிட்டுள்ளார்.