day, 00 month 0000

தமிழினத்தின் விடியலுக்காய் தொடரும் அமைதி போராட்டம்: பிரான்ஸ் புலம்பெயர் தமிழர்களை சென்றடைந்த மனித நேய ஈருருளிப்பயணம்

மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசினால் திட்டமிட்டு நடத்தப்படுகின்ற தமிழ் இன அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்திய மனித நேய ஈருருளிப்பயணம் பிரான்ஸ் புலம்பெயர் தமிழர்களை சென்றடைந்தது.

பிரான்ஸ் புலம்பெயர் தமிழர்களை நோக்கிய பயணம்

தமிழ் இன அழிப்பிற்கு நீதிக்கோரிய மனித நேய ஈருருளிப்பயணம் பத்தாவது நாளாக பிரான்ஸ் நாட்டை சென்றடைந்தது.

பிரித்தானியாவிலிருந்து ஆரம்பித்த இந்த மனித நேய ஈருருளிப்பயண போராட்டம் கடந்த 15 ஆம் திகதி பிரித்தானியாவில் பிரதமர் இல்லத்தின் முன் ஆரம்பித்து நெதர்லாந்து அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் ஊடாக பயணித்து கடந்த 19 ஆம் திகதியன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டமாக மாறியது.

பின்னர் பெல்ஜியம் ,லுக்சாம்பூர்க் , ஜேர்மனி ஊடாக பிரான்ஸ் புலம்பெயர் தமிழர்களை சென்றடைந்துள்ளது. இதன்போது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாய் பல அரசியல் சந்திப்புக்களும் பிரான்ஸில் இடம்பெற்றது. குறிப்பாக

கம்சயிம் நகர மேயருடனான உரையாடல் இடம்பெற்றது. இதன்போது, "இலங்கை பேரினவாத அரசின் திட்டமிட்ட தமிழ் அன அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைகள் வேண்டும்.

தமிழர்களின் தாயகமான நாடாகிய தமிழீழத்தின் விடுதலை, தமிழின அழிப்பினை தொடரும் இலங்கை அரசையும் அதில் பங்கெடுத்த, போர்க்குற்றவாளிகளுக்கு பயண மற்றும் பொருளாதார தடை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

இதனையடுத்து இவ்விடயம் தொடர்பில் பிரான்ஸின் உயர் மட்ட தரப்பினரிடம் எடுத்து செல்லப்படும் என நகர மேயர் உறுதியளித்திருந்ததுடன், தமிழீழத்தின் நம்பிக்கை நகர்விற்கு வழிவகுக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

இதன்போது கோரிக்கை அடங்கிய மனு நகர மேயருக்கு கையளிக்கப்பட்டது.

முன்னோக்கி நகரும் ஈருருளிப் பயணம்​

பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடரை நோக்கி உணர்வெழுச்சியுடன் அனைத்துல நீதி வேண்டி விடுதலை நோக்கியும் மனித நேய ஈருருளிப்பயணம் பிரான்ஸிலிருந்து தொடர்ந்து பயணிக்கிறது.

இந்த ஈருருளிப் பயணம்​ எதிர்வரும் 4 ஆம் திகதியன்று ஜெனிவாவை சென்றடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்