day, 00 month 0000

காஸாவில் நடப்பது இனப்படுகொலை: பிரேசில் ஜனாதிபதி குற்றச்சாட்டு

பாலஸ்தீனத்தில் வாழும் மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலைகளை மேற்கொண்டு வருவதாக பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

யூதர்களை அழிக்க ஜேர்மனிய சர்வாதிகாரி அடோல் ஹிட்லர் மேற்கொண்ட பிரசாரத்திற்கு இணையாக இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான போரே காஸாவில் நடக்கின்றது

எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் ஆபிரிக்க ஒன்றிய உச்ச மாநாட்டில் கலந்துக்கொள்ள சென்றிருந்த போதே லூலா டி சில்வா இஸ்ரேலுக்கு எதிரான இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

பாலஸ்தீனத்தின் காஸாவில் நடந்து வரும் மோதல் ஒரு படைக்கு எதிராக மற்றொரு படை நடத்தும் போர் அல்ல.

இது தாக்க துடித்துக்கொண்டிருக்கும் இராணுவம் ஒன்றுக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையிலான போர்.

காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள் போன்ற சம்பவங்கள் வரலாற்றில் வேறு எங்கேயும் இதுவரை நடந்ததில்லை.

இருப்பினும், ஒரே ஒரு முறை, யூதர்களைக் கொலை ஹிட்லர் முடிவு செய்த போது இதே போன்ற சம்பவங்கள் நடந்தன எனவும் பிரேசில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பிரேசில் ஜனாதிபதியின் கருத்து வெட்ககேடானவை-இஸ்ரேல் பிரதமர்

அதேவேளை பிரேசில் ஜனாதிபதியின் கருத்துக்கள்வெட்கக்கேடானவை மற்றும் கடுமையானவை என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ விமர்சித்துள்ளார்.

இதனை கண்டிக்கும் வகையில் பிரேசசிலுக்கான தமது தூதுவரை திரும்ப அழைத்துள்ளதாகவும் நெத்தன்யாஹூ கூறியுள்ளார்.

இந்த நிலையில், பிரேசில் ஜனாதிபதியின் கருத்துகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள காஸா மக்கள் அனுபவித்து வரும் துயரத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டுவதாக ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்