ரஷ்ய சிறையில் உயிரிழந்த ஜனாதிபதி விளாடிமிர் புடினின் தீவிர விமர்சகரான அலெக்ஸி நவல்னியின் உடலை அதிகாரிகள் தற்சமயம் விடுவிக்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவரது உடல் இரு வாரங்களுக்கு இரசாயன ஆய்வுக்காக வைக்கப்படும் என்று ரஷ்ய அதிகாரிகள் அலெக்ஸி நவல்னியின் குடும்பத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அலெக்ஸி நவல்னியின் உடல் எங்குள்ளது என்பதை ரஷ்ய அதிகாரிகள் உறுதிப்படுத்தபவில்லை. அதே நேரத்தில் அதைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளுக்கும் முட்டைக் கட்டை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புடின் மீது மேற்கத்திய தலைவர்கள் குற்றச்சாட்டு
மேற்கத்திய தலைவர்கள் நவல்னியின் மரணத்திற்கு ஜனாதிபதி புட்டின் மீது குற்றம் சாட்டினர்.
திங்கள்கிழமை (ப19) செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், நவல்னியின் மரணத்துக்கு புடின் தான் பொறுப்பு என்று பகிரங்கமாக கூறினார்.
நவல்னியின் மரணத்திற்குப் பின்னர் ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க ஆலோசித்து வருவதாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தெரிவித்தன.
நவல்னியின் உடல் எங்கே?
நவல்னி சிறையில் இறந்ததாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
நடைப்பயணத்தை தொடர்ந்து அவர் சரிந்து வீழ்ந்த நிலையில், அவருக்கு சுயநினைவு திரும்பவில்லை என்று நவல்னி தடுத்து வைக்கப்பட்டிருந்த சைபீரிய தண்டனை காலனி அதிகாரிகள் தெரிவித்தனர்.
நவல்னி இறந்த செய்தி வெளியானவுடன் அவரது தாயும் வழக்கறிஞரும் தொலைதூர காலனிக்கு சென்றனர்.
எனினும் அவரது உடலை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளுக்கு பிணவறை மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் பலமுறை முட்டுக்காட்டை ஏற்படுத்தப்பட்டது.
திங்களன்று நவல்னியின் மரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், இதுவரை எந்த முடிவும் இல்லை என்றும் ரஷ்யா கூறியது.