வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் 7வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள அடையாள எதிர்ப்புப் பேரணி, இன்று(2024.02.20) காலை.10.00 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகி, டிப்போச் சந்தியைச் சென்றடையவுள்ளது. எமது உறவுகளின் நீதிக்கான போராட்டத்தில் இணைந்துகொண்டு வலுச்சேர்க்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.