day, 00 month 0000

உலகின் பலமிக்க கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை 101 ஆவது இடம்

2024 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு (Henley Passport Index) வெளியிட்டுள்ளது.

இதில் பிரான்ஸ் கடவுச்சீட்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது, அதே நேரத்தில் இலங்கை கடவுச்சீட்டு, தரவரிசை கடந்த ஆண்டை விட ஒரு இடம் சரிந்து 101 ஆவது இடத்தை பிடித்தது.

இலங்கையின் கடவுச்சீட்டினை வைத்திருப்போர் 43 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு நாடுகளை அவர்களின் கடவுச்சீட்டு வலிமையின் அடிப்படையில் வரிசைப்படுத்துகிறது.

முதலிடத்தில் பல நாடுகள்

2024 ஆம் ஆண்டில், 194 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்கும் கடவுச்சீட்டு மூலம் பிரான்ஸ் இந்த பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.

ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் பிரான்ஸுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளன.

இந்தியா 85 ஆவது இடம்

இந்தியா குறித்த பட்டியலில் 84 ஆவது இடத்திலிருந்து இந்த ஆண்டு 85 ஆவது இடத்துக்கு சென்றுள்ளது.

இந்திய கடவுச் சீட்டினை பயன்படுத்தி 60 நாடுகளுக்கு பயணிகள் விசா இல்லாது பயணிக்கலாம்.

பாகிஸ்தான், பங்களாதேஷ் பின்னடைவு

இதனிடையே, கடந்த ஆண்டைப் போலவே பாகிஸ்தான் 106 வது இடத்தில் உள்ளது. அதேநேரம், பங்களாதேஷ் 101 ஆவது இடத்திலிருந்து 102 வது இடத்துக்கும் சரிந்துள்ளது.

வலுவான இடத்தில் மாலைத்தீவு

இந்தியாவின் அண்டை நாடான மாலைத்தீவுகள் வலுவான கடவுச்சீட்டை தொடர்ந்து 58 ஆவது இடத்தினை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

மாலைத்தீவு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 96 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தினை மேற்கொள்ள முடியும்.

ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு

ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு, கடந்த 19 வருடங்களாக, சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) சிறப்புத் தரவுகளின் அடிப்படையில், 199 வெவ்வேறு கடவுச்சீட்டுகள் மற்றும் உலகளவில் 227 பயண இடங்களை உள்ளடக்கிய தரவுகளிலிருந்து அதன் தரவரிசைகளைப் பெறுகிறது.

இந்தக் குறியீடு மாதந்தோறும் புதுப்பிக்கப்பட்டு சுதந்திர நாடுகளின் குடிமக்களுக்கான உலகளாவிய தரநிலையாக செயல்படுகிறது.

ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் தரவு கடந்த இரண்டு தசாப்தங்களில் உலகளாவிய இயக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் குறிக்கிறது.

2006 ஆம் ஆண்டில், மக்கள் சராசரியாக 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 111 நாடுகளுக்கு கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்