கடந்த 2018ஆம் ஆண்டில் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை பகிர்ந்ததில் நடிகர் எஸ்.வி.சேகர் மீது பத்திரிகையாளர் சங்கத்தால் குற்றம் சாட்டப்பட்டது.
அமைதியை சீர் குலைத்தல், தெரிந்த குற்றம் என கருதி மிரட்டல் விடுத்தல், பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு போன்ற குற்றங்களின் பேரில் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.