day, 00 month 0000

அதானிக்கு பிரியாவிடை கொடுத்த மிலிந்த மொரகொட

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இம்மாத இறுதியில் தமது சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ளார்.

இதன் காரணமாக அவர் இந்தியாவில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு பிரியாவிடை கொடுத்துவருகிறார்.

இந்நிலையில் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி, உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் பிரியாவிடை விருந்து அளித்துள்ளார்.

உயர்ஸ்தானிகர் மொரகொட, தம்முடன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளுக்காக அதானிக்கு நன்றி தெரிவித்தார்.

டெல்லியில் பதவியில் இருந்த காலத்தில் தமக்கு வழங்கிய ஒத்துழைப்புகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

1988 ஆம் ஆண்டில் கௌதம் அதானியால் நிறுவப்பட்ட அதானி குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும்.

அதன் வணிகங்களில் துறைமுக மேலாண்மை, மின்சார உற்பத்தி மற்றும் பரிமாற்றம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுரங்கம், விமான நிலைய செயல்பாடுகள், இயற்கை எரிவாயு, உணவு பதப்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுதல் உள்பட பல்வேறு பணிகளை அதானி குழுமம் முன்னெடுத்துவருகிறது.

அத்துடன், இந்த வார தொடக்கத்தில், ஹிந்துஜா குழுமத்தின் ஐரோப்பாவின் தலைவர் பிரகாஷ் ஹிந்துஜாவினால் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவுக்கு பிரியாவிடை மதிய உணவு வழங்கப்பட்டது.

ஹிந்துஜா குழுமம் ஒரு சிறந்த இந்திய நாடுகடந்த கூட்டு நிறுவனமாகும். இது வாகனம், எண்ணெய் மற்றும் சிறப்பு இரசாயனங்கள், வங்கி மற்றும் நிதி, மின்சாரம் போன்ற பதினொரு துறைகளில் பணிகளை முன்னெடுக்கிறது.

இது வாகன உற்பத்தியாளரான அசோக் லேலண்டைச் சொந்தமாகக் கொண்டுள்ளது. இரண்டு குழுக்களும் இலங்கையில் கணிசமான அளவில் முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்