13வது திருத்தம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் நெகிழ்ச்சி தன்மையை வெளிப்படுத்தவேண்டும் எனஇந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழ் சிறுபான்மையினத்தவர்களுக்கு சமஉரிமையை வழங்க முயலும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த சர்ச்சைக்குரிய விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மிலிந்தமொராகொட ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் தற்போது இது தொடர்பில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் தமிழ் தலைவர்கள் நெகிழ்ச்சி தன்மையை வெளிப்படுத்தவேண்டும் என தெரிவித்தார் என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
தீர்வொன்றை காண்பதற்கு ரணில் விக்கிரமசிங்க தனது நாட்டின் தலைவர்களை கடந்த சில மாதங்களாக சந்தித்து வருகின்றார் இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் கருத்தொருமைப்பாட்டினை பெற முயல்கின்றார் என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
ஜனநாயகத்தில் இது சவாலான விடயம் என தெரிவித்துள்ள மிலிந்த மொராகொட வெவ்வேறு குழுக்கள் வெவ்வேறு கருத்தினை கொண்டிருப்பது வழமை கருத்தியல் மட்டத்தில் எல்லாம் மிக அதிகம் என குறிப்பி;ட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி கிழக்கு மற்றும் வடக்குகிழக்கின் அபிவிருத்தி குறித்தும் பேசுகின்றார் என தெரிவித்துள்ள மிலிந்தமொரகொட திருகோணமலையை பார்த்தீர்கள் என்றால் அது கிழக்கிற்கு முக்கிய அபிவிருத்தியாக அமையப்போகின்றது எண்ணெய் குழாய்கள் அவர்களுக்கு உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.