பிக் பாஸ் கவின் தனது காதலி மோனிகாவை திருமணம் செய்துள்ளார்.
2017ல் வெளியான ‘சத்ரியன்’, 2019ல் வெளியான ‘நட்புனா என்னான்னு தெரியுமா’ படங்களில் நடித்த கவின் 2021ல் ஓடிடியில் வெளியான ‘லிஃப்ட்’ படத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து அவரது நடிப்பில் வெளியான ‘டாடா’ பெரும் வெற்றிபெற்றதுடன் அவரது நடிப்பும் பாராட்டப்பட்டது.
‘டாடா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் அடுத்ததாக நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார்.
இந்நிலையில், நடிகர் கவின் தனியார் பள்ளியில் பணிபுரியும் தனது காதலியான மோனிகாவை இன்று கரம்பிடித்துள்ளார்.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில் அவருக்கு திருமண வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
திருமண நிகழ்வில் நண்பரும், நடிகருமான புகழும் கலந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.