day, 00 month 0000

ஜனாதிபதி தேர்தலில் ராஜயோகத்துடன் கூடிய ராஜபக்ச-இரகசிய பேச்சுகளை நடத்திய மொட்டுக்கட்சி

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார வேலைத்திட்டங்களை தற்போதே ஆரம்பிக்க சில அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இதற்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது நாட்டின் பல பிரதேசங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது.

மேலும் சில கட்சிகள் தாம் நிறுத்த போகும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் உத்தியோபூர்வமற்ற வகையில் தகவல்களை வெளியிட்டுள்ளன.

நாட்டின் தற்போதைய ஜனாதிபதி தேசிய தலைவராக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளரும் அதன் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதனை தவிர பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச அல்லது நாமல் ராஜபக்ச ஆகியோரில் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று எழுத்து பெயர் கொண்ட ஒருவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஞ்சித் பண்டார அண்மையில் கூறியிருந்தார்.

அத்துடன் ராஜயோகத்துடன் கூடிய ராஜபக்சர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது சம்பந்தமாகவும் பொதுஜன பெரமுன இரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்