அமெரிக்காவில் கடந்த ஆண்டு சுமார் 49 ஆயிரத்து 500 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.
இவ்விடயம், கடந்த வியாழக்கிழமையன்று அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட தரவுகளிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில், எண்களை வெளியிட்ட நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் அந்த ஆண்டிற்கான தற்கொலை விகிதத்தை இன்னும் கணக்கிடவில்லை.ஆனால் கிடைக்கக்கூடிய தரவுகளின்படி, இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்திலிருந்ததைபோல் தற்போது அமெரிக்காவில் தற்கொலைகள் அதிகமாக பதிவாகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அண்மைய பகுப்பாய்வின்படி, 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒட்டுமொத்த தற்கொலைகளில் துப்பாகியின் மூலம் உயிரை மாய்த்துக்கொண்டவர்களின் விகிதமே அதிகம்.
அமெரிக்காவில் கடந்த காலங்களில் துப்பாக்கி விநியோகமும் அதிகரித்துள்ளது.
மேலும், அமெரிக்காவில் முதல்முறையா கறுப்பின பதின்ம வயதினரே அதிகளவில் தற்கொலை செய்துக்கொள்கின்றனர். குறிப்பாக துப்பாக்கியை பயன்படுத்தியே இவர்கள் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.
அமெரிக்காவில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருவர் தற்கொலைக்கு இலக்காவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவில் தற்கொலை விகிதம் அதிகரிக்க, அதிக அளவு துப்பாக்கி வன்முறை மற்றும் மனநோய் ஆகியனவே காரணம் என்று நம்பப்படுகிறது.
இதேவேளை, 2021இல் அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் 55 வீத தற்கொலைகளுக்கு துப்பாக்கி கலாச்சாரமே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இளவயது தற்கொலை 27 வீதம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய தற்கொலைகளில் 77 சதவீதம் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் நிகழ்கின்றன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஆண்டிற்கு ஒரு இலட்சம் பேரில் 12 பேர் தற்கொலை செய்துக்கொள்கின்றனர்.
தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையை விடவும், ஆண்களே அதிகளவு தற்கொலை செய்துக்கொள்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 20 மில்லியனுக்கும் அதிகமானோர் தற்கொலை மூலம் இறக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.