day, 00 month 0000

இடைக்கால ஜனாதிபதிக்கு 13வது திருத்ததை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் இல்லை-விமல்

இடைக்கால ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க, தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் மக்கள் ஆணையையே பிரதிநித்துவப்படுத்த வேண்டும் எனவும் அந்த மக்கள் ஆணைக்கு அமைய 13 வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் தற்போதைய ஜனாதிபதிக்கு இல்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ஸ தெரிவித்துள்ளார்.

இதனால், புதிய அரசியலமைப்புச்சட்டத்தின் ஊடாக சிங்கள,தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

13வது திருத்தச்சட்டம் தொடர்பாக தேசிய சுதந்திர முன்னணியின் யோசனை ஒன்றை சர்வக்கட்சி மாநாட்டில் முன்வைத்தோம். அதில் முன்வைக்கப்பட்டுள்ள 10 யோசனைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளோம்.

உள்ளூராட்சி நிறுவனங்கள் மட்டத்திற்கு நிறைவேற்று அதிகாரங்களை கூடுதலாக பகிர்தல், பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள மக்களின் அரசியலமைப்பு ரீதியான அதிகாரத்தை கைவிடல் அல்லது இரண்டு நிறுவனங்களுக்கு பகிர்தல், உள்ளூராட்சி சபைகள் மூலம் பிரதேச அபிவிருத்திகளை ஒழுங்குப்படுத்தல், பிரதேச சபைகளுக்கு பாராளுமன்றத்தின் ஊடாக வழங்கும் நிறைவேற்று அதிகாரத்தை நடைமுறைப்படுத்த தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சர்களை நியமித்தல், உள்ளூராட்சி சபைகள் மட்டத்தில் மக்கள் சபைகளை ஏற்படுத்துதல், வடக்கில் சாதி ரீதியான பாகுபாடுகளை எதிர்நோக்கும் மக்களை வலுப்படுத்தல், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான கூட்டு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அதிகார சபையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட யோசனைகளை நாங்கள் முன்வைத்துள்ளோம் எனவும் விமல் வீரவங்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு முன்னர், இதற்கு முன்னர் பதவியில் இருந்த 7 ஜனாதிபதிகள் ஏன் அந்த அதிகாரங்களை வழங்கவில்லை என்பது குறித்து ஆழமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைக்க பொதுஜன பெரமுன எந்த வகையிலும் இணங்காது.

மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமாயின், வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைக்க வேண்டும் என வடக்கை சேர்ந்த சில அரசியல் கட்சிகள் விடுக்கும் கோரிக்கைகளை கைவிடுவதாக அந்த கட்சிகள் உறுதிமொழியை வழங்க வேண்டும் எனவும் சாகர காரியவம் கூறியுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்