day, 00 month 0000

ஈக்வடோர் நாட்டின் ஜனாதிபதி வேட்பாளர் சுட்டுக்கொலை

ஈக்வடோர் நாட்டின் ஜனாதிபதி வேட்பாளரான பெர்னாண்டோ வில்லவிசென்சியோ சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற போதே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அவர் கூட்டத்திலிருந்து வெளியே வந்து காரில் ஏறிய சந்தர்ப்பத்தில், ​​கூட்டத்தில் இருந்த ஒருவர் அவரைச் சுட்டார்.

சுமார் 12 துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈக்வடோர் நாட்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெற இருந்தது.

எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளரை சுட்டுக் கொன்றதை தாம் கண்டிப்பதாக ஈக்வடோர் நாட்டின் ஜனாதிபதி Guillermo Lasso தெரிவித்தார்.

குற்றவாளிகள் எந்த நிலையில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஈக்வடோர் நாட்டில் எட்டு வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாகவும், அவர்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்