பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சுற்றியுள்ள அமைச்சு பதவிகள் கிடைக்காத சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மேலும் சிலரின் ஆதரவுடன் “எதிர்க்கட்சி படை” என்ற அணி உருவாக்கப்பட உள்ளதாக பொதுஜன பெரமுனவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒரே இந்த அரசியல் வேலைத்திட்டம் வெற்றியளித்தால், பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்னர் நாமல் ராஜபக்சவை எதிர்க்கட்சி தலைவர் பதவி வரை கொண்டு செல்வது எனவும் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அந்த அணிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களை இணைக்கும் நடவடிக்கைகள் இரகசியமான முறையில் நடந்து வருவதாக தெரியவருகிறது.