1974 ஆம் ஆண்டு சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் விவசாயிகள் வயலில் உழுது கொண்டிருந்த போது பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.
பேரரசரின் சமாதியைத் திறந்தால் நாட்டுக்கு பேரழிவு ஏற்படும் என்ற வதந்தியும் பரவியது. இதனால், எவரும் கல்லறை திறக்க முயற்சிக்கவில்லை.
பேரரசரின் கல்லறைக்கு அருகில் ஏராளமான போர் வீரர்களின் சிலைகள், ஆயுதங்கள் மற்றும் களிமண்ணால் செய்யப்பட்ட குதிரைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
பேரரசர் இறந்த பின்னர் அவரது உடலை பாதுகாக்கவே இந்த போர் வீரர்களின் சிலைகள், ஆயுதங்கள் கொண்ட அரண் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கல்லறையை எவரும் தொடக்கூடாது என்பதற்காகவே இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கல்லறையை சுற்றி சுமார் 100 தொன் பாதரசம் இடப்பட்டுள்ளதுடன் கல்லறைக்குள் புதையல்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.