உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியை கொலை செய்ய சூழ்ச்சி செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது ரஷ்யாவின் சூழ்ச்சி எனவும் அது தொடர்பான பெண்ணொருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் உக்ரைன் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் Kakhovka அணை உடைந்ததன் காரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட Mykolaiv நகருக்கு உக்ரைன் ஜனாதிபதி செல்லும் முன்னர், அவரது விபரங்களை தேடியறிய இந்த பெண் முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை பெண் கைது செய்யப்பட்டமை குறித்து பாதுகாப்பு தரப்பினர் தனக்கு அறிவித்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதியை கொலை செய்த சூழ்ச்சி செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ரஷ்யா இதுவரை எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை.