சீனாவின்-ஷான்டாங் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை 2.33 மணியளவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுகக்கம் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் 126 கட்டிடங்கள் இடிந்து சேதமான நிலையில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்த பத்து பேரும் சிகிச்சைகளுக்காக வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில் பதிவானது.
இதேநேரம், இந்நிலநடுக்கத்தின் எதிரொலியாக இந்தியாவின்- டெல்லியிலும் நேற்று இரவு நில அதிர்வு உணரப்பட்டது.
அதேபோல் நேற்று ஜம்மு காஷ்மீர் பகுதியிலும் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும், இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஜம்மு காஷ்மீரில் பல்வேறு ரிக்டர் அளவுகளில் 12 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.