day, 00 month 0000

“லான்சாவின் புதிய கூட்டணி“ – கொழும்பு அரசியலில் உக்கிரமடையும் முரண்பாடுகள்

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவுக்கு பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் முற்றியுள்ளதாகவும் இதனால் கட்சிக்குள் அரசியல் நெருக்கடிகள் உக்கிரமடைந்துள்ளதாகவும்  அறிய முடிகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, பொதுஜன பெரமுனவில் இருந்து விலகியவர்கள் மற்றும் கட்சியில் உள்ள ஒரு குழுவை இணைத்து புதிய அரசியல் கூட்டணியை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொதுஜன பெரமுனவை சேர்ந்த சிலருடன் லான்சா எம்.பி பேச்சுவார்த்தைகள் நடத்திவருவது கட்சிக்குள் முரண்பாடுகளை தோற்றுவிக்க வழிவகுத்துள்ளதாகவும் பஸில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்சன யாப்பா, டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, பிரியங்கர ஜயரத்ன மற்றும் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஆகியோருடன் அரசாங்கத்தில் இணைந்துள்ள ஒரு குழுவினரை ஒன்றிணைத்து இந்த புதிய கூட்டணியை கட்டியெழுப்புவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா செயற்பட்டு வருகிறார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் இந்தக் கூட்டணியில் இணைத்துக்கொள்ள பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இராஜகிரியவில் புதிய கூட்டணிக்கான அலுவலகத்தை திறப்பதற்கு நிமால் லான்சா நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவு இந்தக் கூட்டணி ஆதரவை வழங்கவுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ள பின்புலத்திலேயே முரண்பாடுகளும் உச்சம் தொட்டுள்ளன.

இதேவேளை, ஜனாதிபதியின் விசேட செயற்றிட்டங்களை செயல்படுத்தும் பொறுப்புகள் நிமல் லான்சாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து பணியாளர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்