ஜெயிலர் திரைப்படத்தின் 'காவாலா' பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
‘காவாலா’ பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதிய நிலையில், ஷில்பா ராவ் பாடியுள்ளார்.
இந்நிலையில், நடிகை தமன்னாவின் அசத்தல் நடனத்தில் வெளியான 'காவாலா' பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பதாக படக்குழு காணொளியுடன் அறிவித்துள்ளது.
இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், நடிகர் ரஜினி நாயகனாக நடித்துள்ள ‘ஜெயிலர்’ 10ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.