day, 00 month 0000

ஐரோப்பா பயணம் செய்யும் கனேடியர்களுக்கு விசேட அறிவுறுத்தல்!

ஐரோப்பா பயணம் செய்யும் கனேடியர்களுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் ஐரோப்பாவிற்கு பயணங்களை மேற்கொள்ளும் கனடியர்கள் விசேட அனுமதி ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் வீசா இன்றி கனேடியர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ள முடியும்.

இருப்பினும், அடுத்த ஆண்டிலிருந்து இந்த நடைமுறையில் சிறு மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும் கனடியர்கள் அனுமதி ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த அனுமதிக்காக 7 யூரோக்கள் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய பயண தகவல் மற்றும் அனுமதி முறைமையின் கீழ் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்