2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆடை அணிந்த நபர்களின் பட்டியலில் பிரித்தானியாவின் முதல் பெண்மணி அக்ஷதா மூர்த்தி முதலிடம் பிடித்துள்ளார்.
புகழ்பெற்ற Tatler இதழ் 2023 ஆம் ஆண்டிற்கான பிரித்தானியாவில் சிறந்த ஆடை அணிந்த நபர்களின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருடாந்திர பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் நாட்டின் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியும், முதல் பெண்மணியுமான அக்ஷதா மூர்த்தி முதலிடம் பிடித்துள்ளார்.
அவரின் உடை அணியும் ஃபேஷன் சென்ஸ் குறித்து "அற்புதமான முதல் பெண்மணி" ("First Lady Fabulous") என Tatler இதழ் பாராட்டியுள்ளது.
ஜப்பானில் நடந்த G7 உச்சி மாநாட்டில் அக்க்ஷதாவின் தோற்றம் ஃபேஷன் உலகின் கவனத்தை ஈர்த்த ஒரு தனித்துவமான தருணங்களில் ஒன்றாகும்.
அவர் தனது கணவர் ரிஷி சுனக் உடன் பிங்க் நிற டாப் மற்றும் பச்சை நிற கால்சட்டையுடன் வருகை புரிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.