day, 00 month 0000

டிடி ரிட்டர்ன்ஸ் வெற்றியை தாறுமாறாக கொண்டாடிய நடிகர் சந்தானம்

'டிடி ரிட்டன்ஸ்' படக்குழு நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளனர்.

இது குறித்த புகைப்படங்களை நடிகர் சந்தானம் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

கடந்த வாரம் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் சந்தானத்துக்கு சிறந்த வரவேற்பை கொடுத்து வருகின்றது.

பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானத்துடன் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், முனிஷ்காந்த் என பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

அதிகம் எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ், நசைக்சுவையில் அதகளம் செய்துள்ளது.

படம் வெளியான மூன்று நாட்களில் 8 முதல் 10 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இனி வரும் நாட்களிலும் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டிடி ரிட்டர்ன்ஸ் வெற்றியை படக்குழுவினருடன் நடிகர் சந்தானம் கொண்டாடியுள்ளார். தயாரிப்பாளர், இயக்குநர் உட்பட டிடி ரிட்டன்ஸ் படக்குழுவினர் சந்தானத்துக்கு மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை சந்தானம் டுவிட்டரில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்களும் சந்தானம் உட்பட டிடி ரிட்டர்ன்ஸ் படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்