சர்வக்கட்சி மாநாடு ஜனாதிபதியின் அரசியல் தேவைக்கு அமைய நடத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிதத்துள்ளார்.
கண்டியில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அத்தநாயக்க இதனை கூறியுள்ளார்.
அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே ஜனாதிபதி சர்வக்கட்சி மாநாட்டை நடத்தினர்.
13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இல்லை,எனினும்13வது திருத்தச் சட்டத்தில் உள்ள மாகாண சபைகள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளன.
இதனால், 13வது திருத்தச் சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தி, அவற்றை மீண்டும் செயற்பட சந்தர்ப்பம் வழங்குகள் என்ற யோசனையை நாங்கள் முன்வைத்தோம்.
அப்படி நடந்தால், 13வது திருத்தச் சட்டத்தில் உள்ள 98 வீதான அதிகாரங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
இதன் பின்னர் மீதமுள்ள அதிகாரங்களை பகிர்வது குறித்து மாகாண சபை உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது.
அதனை விடுத்து, மாகாண சபைகள் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. இந்த நிலையில் 13 வது திருத்தச் சட்டத்தை காண்பித்து நாட்டை பிரச்சினைகளை மறக்ககடிக்க செய்ய ஜனாதிபதி முயற்சிப்பதாகவே எமக்கு தோன்றுகிறது.
அதேவேளை ஜனாதிபதியின் இந்திய விஜயம் சிறந்தது, இந்த விஜயத்தின் மூலம் பிரதிபலன்களை பெற வேண்டும். முதலீடு செய்வது சிறந்த, அதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி வீழ்ச்சியடையவில்லை என்பதுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் ஒன்றிணையவும் இல்லை.
மொட்டுக்கட்சி ஜனாதிபதியை நிராகரித்து வருகிறது. நாங்கள் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து செயற்படுவோம்.
ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடாக அன்று நாங்கள் மாற்று வேட்பாளரை நிறுத்தியதன் காரணமாக கட்சி அழிந்து போனது. மொட்டுக்கட்சிக்கு, ஐக்கிய தேசியக்கட்சி மீது விருப்பமில்லை.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா அல்ல எவரையும் வேட்பாளராக நிறுத்த முடியும், ஆனால், சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்துவது என கட்சி தீர்மானித்துள்ளது எனவும் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.