day, 00 month 0000

ட்விட்டர் கணக்கை மீளப்பெற்ற கன்யே வெஸ்ட்

அமெரிக்க ராப் இசை பாடகராகவும், இசையமைப்பாளராகவும் விளங்கும் கன்யே வெஸ்ட் (Kanye West ) க்கு எதிராக ட்விட்டர் மூலம் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கை மறுஉருவாக்கம் செய்யும் பணியில் ட்விட்டர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

வன்முறையைத் தூண்டக்கூடிய வகையிலான கருத்துக்கள் பகிரப்பட்டமை உள்ளிட்ட பல காரணங்களினால் கன்யே வெஸ்டின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.

குறித்த தடை எட்டு மாதங்கள் வரையில் நடைமுறையில் இருந்ததோடு, ட்விட்டர் தளத்தின் விதிமுறைகளை மீறியதாக கன்யே வெஸ்ட் மீது குற்றம் சுமத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எலோன் மஸ்க் ட்விட்டர் கணக்கை X ஆக மாற்றிய பிறகு, வெஸ்ட் தனது ட்விட்டர் கணக்கின் உரிமையை மீளப் பெற்றார்.

கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி வெஸ்ட்டின் ட்விட்டர் கணக்கு இடைநிறுத்தப்பட்டது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்