day, 00 month 0000

நாட்டின் தலைவராக தன்னை பிரகடனப்படுத்திய நைஜர் இராணுவ தளபதி

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரில் இராணுவ புரட்சியை நடத்திய அந்நாட்டு இராணுவ தளபதி ஜெனரல் அப்தூரஹ்மான் ஷியானி நாட்டின் தலைவரான தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து அரச தொலைக்காட்சியில் உரையாற்றிய ஜெனரல் அப்தூரஹ்மான் ஷியானி

நைஜர் தற்போது பலவேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. பாதுகாப்பின்மை, பொருளாதார நெருக்கடி, ஊழல் என்பன நாட்டில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக நாட்டின் தலைவர் பதவியை ஏற்றுள்ளதாக கூறியுள்ளார்.

நைஜர் பிரான்ஸின் காலனித்துவ நாடாக இருந்து வந்ததுடன் கடந்த 1960 ஆம் ஆண்டு சுதந்திரமடைந்தது.

இதனையடுத்து அந்நாட்டை இராணுவ ஆட்சியும், ஜனநாயக ஆட்சியும் மாறிமாறி நடந்து வந்துள்ளது.

இவ்வாறான நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனநாயக ரீதியான ஜனாதிபதி தேர்தலில் மொஹமட் பாஸூம் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினார்.

இதனையடுத்து 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் திகதி அவர் பதவி ஏற்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இராணுவத்தின் ஒரு பகுதியினர் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஆட்சியை கைப்பற்ற முயற்சித்தனர்.

பாதுகாப்பு படையினர் கிளர்ச்சியை முறியடித்து, இராணுவத்தின் சில அதிகாரிகளை கைது செய்தனர்.

அப்போது இராணுவ சதிப்புரட்சியை மொஹமட் பாஸூம் முறியடித்த போதிலும் கடந்த வியாழக்கிழமை மீண்டும் நடந்த சதிப்புரட்சியில் இராணுவம் அவரை ஆட்சியில் இருந்து அகற்றியது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்