day, 00 month 0000

கண்டியில் இடம்பெற்ற கார் விபத்தில் ரஷ்ய இளைஞர் உட்பட இருவர் பலி!

கண்டியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ரஷ்ய இளைஞர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று(29.07.2023) பிற்பகல் கண்டி மீமுரே வீதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த ரஷ்ய இளைஞர் 28 வயதுடையவர் எனவும், மற்றையவர் இலங்கையை சேர்ந்த 51 வயதுடைய பெண் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கண்டி - மீமுரே வீதியில் பயணித்த கார் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த விபத்தில் ரஷ்ய இளைஞரும் இலங்கைப் பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் காரில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்