வடக்கு மற்றும் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது காங்கேசன்துறை துறைமுகம், வவுனியா மற்றும் பலாலி விமான நிலையங்கள் மற்றும் வட மாகாணத்தை தென்னிந்தியாவுடன் இணைக்கும் படகுச் சேவையை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் தினேஸ் குணவர்தன, அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேமஜெயந்த, விஜேதாஸ ராஜபக்ஷ, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், டெலோ உட்பட வடக்கு, கிழக்கு பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளன.
வடக்கிற்கான நீர் திட்டங்கள் தொடர்பில் பிரதானமாக கலந்துரையாடப்பட்டதுடன், பூனேக்கேரி குளத்தை அபிவிருத்தி செய்தல், யாழ்ப்பாணத்திற்கான ஆறு புதிய நீர் திட்டங்களை ஏற்படுத்தல் மற்றும் இரணைமடு குளத்தின் நீர் கொள்ளளவை அதிகரிப்பது, சிறிய குளங்களை புதுப்பித்தல் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாட்டுள்ளது.