நடிகர் விஜய் தற்போது ‘லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதனையடுத்து இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணைந்து ‘தளபதி 68’ படத்தில் நடிக்க உள்ளார்.
இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ள நிலையில் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
பல வருடங்களுக்குப் பிறகு விஜய்-யுவன் கூட்டணி ஒன்றிணைவதால் படத்தின் இசைக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே இதன் இசை உரிமம் கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய்க்கும் மேல் விற்றுத் தீர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் விஜய் - யுவன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.